'நமசிவாய' 'நாராயணா' எப்படி சொன்னாலும், இறைவனின் திருவருளுக்கும், பேரருளுக்கும் பாத்திரமாகலாம் என, புராணங்கள் கூறுகின்றன.அவிநாசித் திருத்தலம், உலகம் முழுவதுமுடைய காசி விஸ்வநாதரின் வேரில் இருந்து உதித்த புண்ணிய பூமியாகும். அங்கு, ஆதிசக்தியாகிய பார்வதி அம்மன், ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து பூஜித்திருக்கிறாள்.படைப்பு தொழிலை புரியும் பிரம்மதேவனும், 100 ஆண்டுகள் சிரத்தையுடன் அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட்டு, இழந்த பதவியை மீண்டும் அடைந்திருப்பதாக, தல வரலாறு எடுத்துரைக்கிறது.படைத்தல், காத்தல், முக்தி கொடுத்தல் ஆகிய முப்பெரும் பணியை செய்யும், மும்மூர்த்திகள் உறையும் தலமாகவும் அவிநாசி விளங்குகிறது. புண்ணியத்தின்பிறப்பிடம்
விஜயநகர பேரரசு மற்றும் மைசூர் மன்னர்கள்காலத்தில், நல்லாற்றில் வடக்கே, பெருமாளுக்கும் கோவில் எழுப்பியுள்ளனர். ஆற்றின் தென்புறமும் சிவாலயமும், வடபுறம், கரிவரதராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களும் அமைந்துள்ளன. அவிநாசி கோவிலில் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் தரிசித்த புண்ணித்தை பெறலாம்!சிவாலயங்களில், மூலவர் சன்னதியை நோக்கியபடி, மூலவரின் வலதுபுறம் சூரியபகவானும், இடதுபுறம் சந்திரபகவானும், சிவபெருமானை வணங்கியபடி காட்சியளிப்பது வழக்கம். அவிநாசித்திருத்தலத்தில், இதுமாறியிருக்கிறது.ஆம், ராஜகோபுர கட்டடத்தின் உட்புறம், அவிநாசிலிங்கேஸ்வரருக்கு வலது புறம் சந்திரனும், இடதுபுறம் விஷ்ணுவும் அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு பெருமாள், அபய, ஹஸ்த முத்திரையுடன், புன்னகை பூத்த முகத்துடன், கருணைவிழிகளுடன் அருள்பாலிப்பது தனி சிறப்பு. சிவசூரியன் வழிபாடு
சூரியபகவான், இத்தலத்தில், சிவசூரியன் என்ற திருநாமத்துடன் தனி சன்னதி கொண்டிருக்கிறார். சபா மண்டபம் மற்றும் ராஜகோபுரத்துக்கு இடையே, ராஜகோபுர சுவற்றில், புடைப்பு சிற்பமாக, மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார். நவக்கிரகத்தின் நடுநாயகமாக இருக்கும் சிவசூரியனை, இங்கு வழிபட்டால், நவகிரக தோஷம் விலகி நன்மை உண்டாகும் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் ஐதீகம்.மூலாலய முன் மண்டபம், நவரங்க மண்டபம், அம்மன் சன்னதியின் முன் மண்டப துாண்களில், நெற்றியில் திருநாமம் சூட்டிய பக்தர்களின் வடிவம் உள்ளன. பன்னெடுங்காலமாக, மும்மூர்த்திகளையும் அவிநாசி திருத்தலத்தில் வழிபட்டு, வாழ்வில் சிறந்திருந்ததற்கு இதுவே ஆதாரமாக நிற்கிறது.ஆறாம் திருமுறையின், 73வது திருப்பதிகத்தில், திருநாவுக்கரசர், திருக்கொட்டையூர், ஸ்ரீகோடீஸ்வரர், ஸ்ரீகந்துக கிரீடாம்பாள், ஸ்ரீபந்தாடு நாயகி கோவிலில், பாடியுள்ளார்.அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்என்று துவங்கும் அந்த பாடலில்,'மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்'என்றும் பாடியிருக்கிறார்.அதாவது, 'அவிநாசியப்பரை வழிபட்டால், அண்டம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தை பெறலாம்.