உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் பரிசு பட்டியலில் குழப்பம்; இ.கம்யூ., கட்சியினர் போராட்டம்

பொங்கல் பரிசு பட்டியலில் குழப்பம்; இ.கம்யூ., கட்சியினர் போராட்டம்

உடுமலை:தகுதியுள்ள அனைவருக்கும், பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சி சார்பில், தாலுகா அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடந்தது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகைக்காக, ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகள் வாயிலாக, டோக்கன் வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உடுமலை தாலுகாவில், தகுதியுள்ள பலருக்கும் டோக்கன் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை, இ.கம்யூ., கட்சியினர் தாலுகா செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமையில், உடுமலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 'தமிழக அரசின் பொங்கல் ரொக்கப்பரிசு வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், ஏழை மக்கள் பல ஆயிரம் பேர்கள் விடுபட்டுள்ளது.எனவே, முறையாக மீண்டும் தணிக்கை செய்து, தகுதியுள்ள ஏழை மக்கள் அனைவரையும், பயனாளிகள் பட்டியலில் சேர்த்து பண்டிகைக்கு முன், ரொக்கத்தொகை வழங்க வேண்டும்,' என தெரிவித்தனர்.இது குறித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்ததால், இ.கம்யூ., கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை