உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைக் சாகசத்தால் அச்சுறுத்தும் சிறார்கள் போலீசார் நடவடிக்கை எடுப்பது அவசியம்

பைக் சாகசத்தால் அச்சுறுத்தும் சிறார்கள் போலீசார் நடவடிக்கை எடுப்பது அவசியம்

உடுமலை:காரைக்குடி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப்பின்பற்றி, திருப்பூர் மாவட்டத்திலும்,சாகசம் என்ற பெயரில் 'பைக்' ஓட்டும் சிறார்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், சாலை விபத்துகளில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். போதை மற்றும் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், இதற்கு பிரதான காரணங்களாக உள்ளன.இதில், 18 வயது நிரம்பியவர்கள் தான் உரிமம் பெற்று, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட முடியும்.வயது நிரம்பாத நிலையிலும், பெற்றோர் வாங்கிக்கொடுக்கும் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்று கட்டுப்பாடு இழந்து, 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிகளவில் விபத்துகளைச்சந்திக்கின்றனர்.அவ்வகையில், சமீபத்தில், காரைக்குடியில், 18 வயது நிரம்பாத ஒரு வாலிபர், பைக்கில் அதிவேகமாக வந்த போது, போலீசாரிடம் சிக்கியுள்ளார்.விசாரணையில், அவர் ஓட்டுவதற்காக, அவருக்கு தெரிந்த ஒருவர், தன் 'பைக்'கை வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கின் மீது, காரைக்குடி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 18 வயது நிரம்பாத இளைஞர் ஓட்டுவதற்காக, 'பைக்' வழங்கிய குற்றத்திற்காக, பைக் உரிமையாளருக்கு, 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அந்த அபராத தொகையை அவர் செலுத்தினார். 'ஓராண்டு காலத்துக்கு அந்த வாகனத்தின் பதிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் நகல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் சாகசம் என்ற பெயரில், 'பைக்' ஓட்டும் சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை