| ADDED : ஆக 25, 2011 11:51 PM
உடுமலை : உடுமலை மற்றும் கிராமப்புறங்களில் தமிழக அரசின் நூறாவது நாளை அ.தி.மு.க., வினர் சிறப்பாக கொண்டாடினர். உடுமலை நகரில் நடந்த விழாவுக்கு பொதுக்குழு உறுப்பினர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். அண்ணாத்துரை சிலை அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அரசு வக்கீல் ராமகிருஷ்ணன், இணை செயலாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர். புதுப்பாளையம்: நிகழ்ச்சிக்கு ஊராட்சி செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ., பேரவை துணை தலைவர் சிவராஜ் பங்கேற்றனர். அடிவள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கிளை செயலாளர் வேலுச்சாமி, முருகன் மற்றும் நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். வால்பாறை: சட்டசபை தொகுதி இணை செயலாளர் சண்முகவேல் தலைமையில் அ.தி.மு.க., வினர் நகராட்சி அலுவலகத்தின் முன் திரண்டனர். அங்கு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் முருகன், பேரவை தலைவர் பாபுஜி, மீனவரணி செயலாளர் அபுபக்கர், பாசறை தலைவர் சசிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி: அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.