உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுக்கு ஓட்டளிக்க தெரியுமா?

உங்களுக்கு ஓட்டளிக்க தெரியுமா?

திருப்பூர்;வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நடமாடும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர (இ.வி.எம்.,) வாகனங்கள், நேற்று முதல் பிரசார பயணத்தை துவக்கியுள்ளன.தேசிய வாக்காளர் தினமான நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். 'ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, மொழி தாக்கங் களுக்கு ஆட்படாமலும், எந்த துாண்டுதலுமின்றி வாக்களிப்பேன்' என, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.தேசிய வாக்காளர் தின வினாடி - வினா, சுவர் விளம்பரம் உருவாக்குதல், பாட்டு, கடிதம் எழுதுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது.சிறப்பாக பணிபுரிந்த தேர்தல் கல்விக்குழு பொறுப்பாளர்கள், தேர்தல் கணினிப்பிரிவு பணியாளர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர் ஆகியோருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.அதன்பின், நடமாடும் இ.வி.எம்., பிரசார வாகனங்களை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், போலீஸ் எஸ்.பி., சாமிநாதன், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சப்-கலெக்டர் சவுமியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.நடமாடும், இ.வி.எம்., அமைக்கப்பட்டுள்ள வாகனத்தில், பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று, ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும். 'டம்மி பேலட் ஷீட்' வைக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்து, 'விவிபேட்'-ல் சரிபார்த்து கொள்ளலாம், என தேர்தல் பிரிவு அலு வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி