உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சங்கம் சார்ந்து வாடகை வாகனம் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

சங்கம் சார்ந்து வாடகை வாகனம் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

திருப்பூர்:தேர்தல் பணிக்கு, சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்கள் மூலமாக, வாகனங்களை வாடகைக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அனைத்து சங்க கூட்டமைப்பு, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம், 'ஆல்ட்ராக்' ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில், 'நீண்ட காலமாக, தேர்தல் பணிக்கு தேவையான நேரங்களில், வாடகை வாகனங்களை இயக்கி வந்தோம். கடந்த தேர்தலில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வாகனத்தை இயக்கியும், மிக குறைவான கட்டணத்தை வழங்கினர்; எனவே, விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கி வரும் எங்களுக்கு, லோக்சபா தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்.சங்கங்கள் வாயிலாக, வாகனங்களை வாடகைக்கு எடுத்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ