உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாடா நகர் ரயில் இயக்கம் நீட்டிப்பு

டாடா நகர் ரயில் இயக்கம் நீட்டிப்பு

திருப்பூர்:வியாழன் தோறும் இயங்கும் வகையில் அறிவிக்கப்பட்ட, எர்ணாகுளம் - டாடா நகர் சிறப்பு ரயில் இயக்கம், வரும், 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜார்கண்ட் மாநிலம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக, எர்ணாகுளம் - டாடாநகர் இடையே சிறப்பு ரயில் (எண்:08190) கடந்த, ஜன., மாதம் அறிவிக்கப்பட்டது. 8ம் தேதி, நேற்றும் (பிப்., 15) இந்த ரயில் இயங்கியது. ஜார்கண்டில் இருந்து, 5 மற்றும், 12ம் தேதி எர்ணாகுளத்துக்கு ரயில் வந்து சேர்ந்தது.திங்கள் மற்றும் வியாழன் தோறும் இயங்கும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாடாநகர் - எர்ணாகுளம் ரயில், வரும், 19 மற்றும், 26ம் தேதி, எர்ணாகுளம் - டாடாநகர் ரயில் வரும், 22 மற்றும், 29ம் தேதியும் தொடர்ந்து இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. பாலக்காடு, போத்தனுர் வழியாக திருப்பூர் வரும் இந்த ரயில், கோவை ஜங்ஷன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆலப்புழாவில் இருந்து தன்பாத் (டாடாநகர்) எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படுகிறது. இருப்பினும், வாராந்திர ரயிலும் ஜார்கண்ட்டுக்கு கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால், சிறப்பு ரயில் இயக்கத்தை மேலும் இரு வாரங்களுக்கு ரயில்வே நீட்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை