உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேலோ இந்தியா போட்டி; திருப்பூரில் இருவர் தேர்வு 

கேலோ இந்தியா போட்டி; திருப்பூரில் இருவர் தேர்வு 

திருப்பூர் : சென்னையில் நடக்கவுள்ள 'கேலோ இந்தியா' போட்டிக்கு, திருப்பூரில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தடகள சம்மேளனம், மாநில தடகள சங்கம் சார்பில், கோவையில் நடந்த தேசிய தடகளப் போட்டியில், திருப்பூரை சேர்ந்த பவீனா, விஷ்ணு ஸ்ரீ இருவரும் பங்கேற்று, முறையே மும்முறை தத்தித் தாண்டுதல், 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பதக்கம் கைப்பற்றினர்.தேசிய போட்டியில் வெற்றி பெற்றதால், ஜன., 19 முதல், 31 வரை சென்னையில் நடக்கவுள்ள, 'கேலோ இந்தியா' போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். இருவரையும், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள், மாவட்ட தடகள சங்கத்தினர் பாராட்டினர்.குஜராத்தில் நடந்த தேசிய வாள்வீச்சு போட்டி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்ற, திருப்பூர் மாணவர் மவுரீஸ், சேபர் பிரிவில் தங்கம் வென்றார். மாவட்ட எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகள், திருப்பூர் வாள்வீச்சு சங்க செயலாளர் ஜான்சிலிம் மற்றும் நிர்வாகிகள் மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை