உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போராடாத வகையில் செயல்பாடு உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

போராடாத வகையில் செயல்பாடு உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்

திருப்பூர்:லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முன்னிறுத்தி, மக்கள் போராட்டங்களில் ஈடுபடாத வகையில் செயல்பட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிட்டதால், பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட துவங்கியிருக்கிறது.தடையற்ற நீர் வினியோகம் கேட்டு, மக்கள் ஆங்காங்கே முற்றுகை, மறியல், சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களை முற்றுகையிடுவது போன்ற போராட்டம் வாயிலாக தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர்.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் சமயத்தில் மக்களுக்கு வழங்கப்படும் தடையற்ற மின்சாரம், தடையற்ற குடிநீர் வினியோகத்தை உள்ளாட்சி நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த வேண்டும்; மக்கள் போராட்டங்களில் ஈடுபடாத வகையில் செயல்பட வேண்டும் என, அரசின் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுவது, பொதுவானது தான். கோடை துவங்குவதற்கு முன்பே பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை தென்படுகிறது. 'மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நீர் வினியோகிக்க மாற்று ஏற்பாடுகளை ஆலோசித்து வருகிறோம். மக்கள், போராட்டத்தை நோக்கிச் செல்லாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ