உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை கொட்ட இடமில்லை கொடுவாய் ஊராட்சி திணறல்

 குப்பை கொட்ட இடமில்லை கொடுவாய் ஊராட்சி திணறல்

பொங்கலுார்: கொடுவாய் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சியாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் கிடையாது. எங்கு பார்த்தாலும் குப்பை மயமாக காட்சியளிக்கிறது. குப்பை சேகரிக்க, 30 பேர் அடங்கிய துாய்மை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், சேகரித்த குப்பையை கொட்டுவதற்கு இடமில்லை. கொடுவாய் ஊராட்சி பாழடைந்த கிணறுகளை தேடி பிடித்து குப்பைகளை கொட்டி வருகிறது. கிணறு நிரம்பி விட்டால் திருப்பூர் மாநகராட்சி போல் அடுத்த கிணறை தேடுகின்றனர். அதற்குள் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் நிலத்தடி நீர் மற்றும் மண்வளம் கெடுவதாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கடந்த பத்து நாட்களாக கொடுவாயில் குப்பை அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், ''குப்பை கொட்ட தனியார் நில உரிமையாளரிடம் பேசியிருக்கிறோம். நாளை (இன்று) முதல் குப்பைகள் முழு வீச்சில் அகற்றப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை