உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லோக்சபா தேர்தல் நடவடிக்கை; இன்ஸ்., - எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

லோக்சபா தேர்தல் நடவடிக்கை; இன்ஸ்., - எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.லோக்சபா தேர்தல் வருவதையொட்டி இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அவ்வகையில், மாநகருக்கு பல்வேறு இடங்களில் இருந்து இடமாற்றத்தில் வந்து காத்திருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், ஏற்கனவே, ஸ்டேஷன்களில், இரண்டு ஆண்டுகளை கடந்து பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களை திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு இடமாற்றம் குறித்து உத்தரவிட்டுள்ளார்.

14 இன்ஸ்பெக்டர்

காத்திருப்பில் இருந்த மீனாகுமாரி சென்ட்ரல் குற்றப்பிரிவு, பிரபாதேவி மதுவிலக்கு பிரிவு, கோவையில் இருந்து வந்த லதா, அனுப்பர்பாளையத்துக்கும், பிரபுதாஸ் நல்லுாருக்கும், கணேஷ்குமார், தெற்கு ஸ்டேஷனுக்கும், தவமணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், சுமதி, கே.வி.ஆர்., நகர் மகளிர் ஸ்டேஷன், ராஜேஷ்வரி கொங்கு நகர் மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டனர்.கொங்கு நகர் மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா வேலம்பாளையம் குற்றப்பிரிவுக்கும், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.ஐ.சி.,க்கும், சென்ட்ரல் குற்றப்பிரிவு ஜமுனா, அதே ஸ்டேஷனில் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், சைபர் கிரைம் லேப் பிச்சையா, மத்திய குற்றப்பிரிவுக்கும், பிரகாஷ், சைபர் கிரைம் லேப்புக்கும் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மகாலட்சுமி வீரபாண்டி குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

12 எஸ்.ஐ.,க்கள்

அனுப்பர்பாளையம் எஸ்.ஐ., கனகசபாபதி, வீரபாண்டிக்கும், வீரபாண்டி ராஜேந்திரபிரசாத், வடக்கு ஸ்டேஷன், ராஜேஷ்குமார் அனுப்பர்பாளையம், சைபர் கிரைம் லேப் ராபர்ட் கிளைவ், நல்லுார், பிச்சைமணி, சைபர் கிரைம் பிரிவுக்கும், வடக்கு ஸ்டேஷன் தனசேகரன், வீரபாண்டி ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.தெற்கு ஸ்டேஷன் செந்தில்குமார், வேலம்பாளையத்துக்கும், நல்லுார் பழனிசாமி, திருமுருகன்பூண்டிக்கும், சைபர் கிரைம் சையத் ரபிக் சிக்கந்தர், சைபர் கிரைம் லேப்புக்கும், கட்டுப்பாட்டு அறை மணிகண்டன், சைபர் கிரைம் லேப், வேலம்பாளையம் கனகவள்ளி, கட்டுப்பாட்டு அறைக்கும், கட்டுப்பாட்டு அறை காத்திருப்பில் இருந்த கார்த்தி, தெற்குக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை