உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு, இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாநகராட்சியின், 20வது வார்டு கொங்குநகர் பகுதி செயலாளர் முத்து ஏற்பாட்டில், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், காந்தி நகர் பகுதி செயலாளர் கருணாகரன், தொட்டிபாளையம் பகுதி செயலாளர் வேலுமணி, ஏ.டி.பி., செயலாளர் கண்ணபிரான் உட்பட, திரளான கட்சியினர் பங்கேற்றனர்.l மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு, அ.தி.மு.க.,வினரும், பொதுமக்களும் மலர் மரியாதை செய்து வழிபட்டனர். ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணியம், சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.l திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டில் செல்லம் நகர் பிரிவு, கே.வி.ஆர்., நகர் மேற்கு, ஐஸ்கடை வீதி, மைதானம் பகுதிகளில் நடந்த விழாவில், அனைவருக்கும் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.l அவிநாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பெரிய கருணைபாளையத்தில் எம்.ஜி.ஆர்., படத்துக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், கிளைச் செயலாளர்கள் வடிவேல், துரை, ராயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.l அவிநாசி மேற்கு ஒன்றிய ஏ.டி.பி., சார்பில், கருவலுார் மற்றும் தெக்கலுார் ஊராட்சியில் நடந்த விழாவில், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தர். ஏ.டி.பி., செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பன்னீர்செல்வம் அணி

திருப்பூர் குமரன் சிலை அருகே, அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாவட்ட செயலாளர் சண்முகம், அவை தலைவர் ரங்கசாமி, துணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர்பழனிசாமி மற்றும் பலர் அவரின் படத்துக்கு மலர்துாவி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை