உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதையில் தகராறு செய்தவர் கொலை; மனைவி, மகன் கைது

போதையில் தகராறு செய்தவர் கொலை; மனைவி, மகன் கைது

உடுமலை;மடத்துக்குளம் அருகே, குடிபோதையில் தகராறு செய்த நபரை அடித்து கொலை செய்த, அவரது மனைவி, மகனை மடத்துக்குளம் போலீசார் கைது செய்தனர்.மடத்துக்குளம் தாலுகா வேடபட்டி புது காலனியைச்சேர்ந்தவர் தங்கவேல், 58; குடிபோதைக்கு அடிமையான தங்கவேல், வீட்டில், மனைவி வஞ்சிக்கொடி, 49, மற்றும் மகன் வாசுதேவனுடன் நாள்தோறும் தகராறு செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம், தங்கவேல் குடித்து விட்டு வந்தது குறித்து, வாசுதேவன் கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, வஞ்சிக்கொடி மற்றும் வாசுதேவன் சேர்ந்து, தங்கவேலை மண்வெட்டியால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வஞ்சிக்கொடி, வாசுதேவனை கைது செய்தனர். மதுவுக்கு அடிமையான நபரை, மனைவி, மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை