உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீட் விண்ணப்ப திருத்தம்: இன்று கடைசி வாய்ப்பு

நீட் விண்ணப்ப திருத்தம்: இன்று கடைசி வாய்ப்பு

உடுமலை:'நீட்' தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், இன்று இரவுக்குள் செய்ய வேண்டுமென விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மே, 5ம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 9 முதல், மார்ச், 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிந்த நிலையில், 18 முதல், 20ம் தேதி வரை தேர்வு மையம், பெயர், முகவரி உள்ளிட்டவற்றில் விண்ணப்பங்களில் மாற்றம், திருத்தம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (20ம் தேதி) இரவுடன் அவகாசம் முடிவடைகிறது.நீட் தேர்வெழுத மாவட்டத்தில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விபரம் ஓரிரு நாளில் தெரிய வரும், என, மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை