உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லாறு நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

நல்லாறு நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

அவிநாசி;அவிநாசி அருகே நல்லாற்றின் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பொதுமக்கள் கண்டித்துள்ளனர்.அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் நல்லாற்று நீர் வழித்தடம் அமைந்துள்ளது. நம்பியாம்பாளையம், வெள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணையிலிருந்து வெளியேறும் மழைநீர் நல்லாற்று வழித்தடபோக்கில் சென்று நொய்யலில் கலக்கிறது.இதற்கிடையில், எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் வீட்டு மனைகள் விற்பனைக்காக காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. அதில், நல்லாற்று வழித்தடத்தை மண் கொட்டி பரப்பி வீட்டு மனைக்கு வழித்தடம் ஏற்படுத்துவதற்காக முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று அங்கு திரண்டனர். இது குறித்து, தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:இது குறித்து உடனடியாக உரிய நில அளவை செய்து நீர் வழித்தடத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இன்று (புதன்) தாசில்தாரிடம், நல்லாற்றில் ஆக்கிரமிப்பு குறித்து புகார் மனு அளிக்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், அமைக்கப்பட்டுள்ள அரசு பணியாளர் நகரின் சில பகுதியின் நீர்வழிப் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி