உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

பள்ளி மாணவன் தற்கொலை

வெள்ளகோவில், நடுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 45; அருகே உள்ள மில்லில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் நிதிஷ், 14. ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறியவர், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது தாய் மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, நிதிஷ் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தண்ணீரில் மூழ்கி முதியவர் பலி

திருப்பூர் அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி, ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 81. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டிலுள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து, தண்ணீரில் முழ்கி இறந்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து உடலை மீட்டனர். இது குறித்து, பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை