உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வேஸ்ட் குடோனில் பயங்கர தீவிபத்து

 வேஸ்ட் குடோனில் பயங்கர தீவிபத்து

பொங்கலுார்: பொங்கலுார் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 44. கொசவம்பாளையம் பிரிவில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். நேற்று இரவு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இயந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டது. தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பற்றியது. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர். தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ