| ADDED : ஜன 26, 2024 01:15 AM
பொங்கலுார்;பொங்கலுார் வள்ளலார் சத்திய ஞான சபை தியான திருக்கோவில் 15ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.நேற்று காலை ஏழு திரை நீக்கி முதலாம் ஜோதி வழிபாடு, 10:00 மணிக்கு இரண்டாம் ஜோதி வழிபாடு, ஒரு மணிக்கு மூன்றாம் ஜோதி வழிபாடு, மாலை, 7:00 மணிக்கு நான்காம் ஜோதி வழிபாடு, இரவு, 10:00 மணிக்கு ஐந்தாம் ஜோதி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று காலை, 6:00 மணிக்கு ஆறாம் ஜோதி வழிபாடு நடக்கிறது. வள்ளலார் கோட்டம்
அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், திருமுருக வள்ளலார் கோட்டத்தில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அகவல் பாராயணம், கொடியேற்றப்பட்டு வழிபாடு துவங்கியது. தொடர்ந்து பூண்டி காயகல்ப சித்த மருத்துவர் தங்கத்தமிழ் முருகன் 'உயிரை மெய் செய்வோம்' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தினார்.மேட்டுப்பாளையம் கல்லாறு அகத்தியர் ஞானபீடம் சரோஜினி, தைப்பூசமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, பசியாற்றுதல் நிகழ்ச்சியில், 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.