உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பையோடு சேர்ந்து பூவும் நாறுது

 குப்பையோடு சேர்ந்து பூவும் நாறுது

திருப்பூர்: பூ மார்க்கெட் பின்புறம் கொட்டி வைக்கப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பையை அள்ளுவதுடன், மெகா சைஸ் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருப்பூர் பெருமாள்கோவில் வீதி அருகே, பூ மார்க்கெட் உள்ளது. சத்தியமங்கலம், நிலக்கோட்டை, திண்டுக்கல், சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி, 2.10 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் அனைத்தும் விற்றுதீராத போது, அழுகிய, காய்ந்த பூக்களை மார்க்கெட் பின்புறம் உள்ள அறிவொளி ரோட்டில், வியாபாரிகள் கொட்டுகின்றனர். இங்கு வைக்கப்பட்டிருந்த மெகா சைஸ் குப்பைத்தொட்டி, பத்து நாட்களுக்கு முன் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், குப்பை வழிநெடுகிலும், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவு, தேங்கி, துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. பூ மார்க்கெட், வணிக வளாக கடைகள் வரை துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இவ்விடத்தில் தேங்கியுள்ள குப்பைகளை மாநகராட்சி அள்ளுவதுடன், மீண்டும் குப்பை தொட்டி வைக்க வேண்டும். பூ மார்க்கெட்டில் இருந்து மக்கும் குப்பையை பிரித்து பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை