உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வங்கி கடனுதவி :விவசாயிகள், இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வங்கி கடனுதவி :விவசாயிகள், இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு

பல்லடம் : பல்லடம் பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்புத்தொழில் பரவலாகி வருகிறது. இத்தொழிலை மேம்படுத்த வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வர வேண்டும் என நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இல்லத்தரசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.பல்லடம் பகுதி, 'பிராய்லர்' எனப்படும் கறிக்கோழி வளர்ப்பில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இப்பகுதியில் தினமும் ஐந்து லட்சம் கறிக்கோழிகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம், கேரளா பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவில் உள்ள கோழிக்கோடு, ஒத்தப்பாலம், திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நாட்டுக்கோழிகளுக்கு 'கிராக்கி' ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்லடம் பகுதியில் பலர், குடிசைத்தொழில்போல் ஆங்காங்கே நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். குறிப்பாக, சிறு விவசாயிகள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், தங்களின் அன்றாட பணிகளுக்கு இடையே, 50, 100, 200 என்ற எண்ணிக்கையில், இட வசதிக்கு ஏற்ப நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். கறிக்கோழி 46 நாட்கள் முதல் 49 நாட்களில் இரண்டு கிலோ எடை அளவுக்கு வளர்கிறது. நாட்டுக்கோழி 125 நாட்களில் ஒரு கிலோ 250 கிராம் எடை மட்டுமே வளரும் தன்மை கொண்டது. கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ தற்போது ரூ.56க்கு விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி உற்பத்தியாளர்களிடம் கிலோ ரூ.120 முதல் 130க்கு கொள்முதல் செய்யப்பட்டு, கடைகளில் உயிருடன் கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது. கறிக்கோழிகளை விட, நாட்டுக்கோழி ருசி, புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது.நாட்டுக்கோழிகளை விரும்பி நுகர்பவர்கள், மீண்டும், மீண்டும் அவற்றையே வாங்கி நுகர விரும்புகின்றனர். பல்லடம் பகுதியில் தற்போது, பல வீடுகளில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டுகோழி குஞ்சு ஒன்று ரூ.20 முதல் 25 வரை சில நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகள், இல்லத்தரசிகள் சிலர் கூறுகையில், '100 நாட்டுக்கோழிகளை வளர்க்க துவங்கினால், வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்லாமல், ஒரு மாதம் குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் 6,000 வரை சம்பாதிக்கலாம். நாட்டுக்கோழி வளர்ப்பு தொழிலை மேம்படுத்த அரசு குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் தர முன்வர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை