உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி சாகுபடி பரப்பு சுருங்குகிறது

தக்காளி சாகுபடி பரப்பு சுருங்குகிறது

பொங்கலுார்: தற்போது, மாசி பட்டத்தில் நடவு செய்யும் தக்காளி சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும்.கோடைக்காலம் என்பதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். பூக்கள் உதிர்வது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதால் வரத்து மிகவும் குறைந்து விடும். மாசிப் பட்ட தக்காளிக்கு அதிகபட்ச விலை கிடைக்கும்.ஆனால், மாசி பட்டத்தில் நடவு செய்வதில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாசி பட்டத்தில் சாகுபடி செய்த விவசாயிகள், கொள்முதலை எடுக்க முடியவில்லை. பலர் நஷ்டம் அடைந்தனர். பாதி நிழலும், பாதி வெயிலும் இருக்கும் நிலங்கள் வைத்திருக்கும் மர விவசாயிகள் சிலர் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சாகுபடி பரப்பு சுருங்குவது, விளைச்சல் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் கோடைக்காலத்தில் தக்காளி விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை