உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சாலை விபத்தில் தாய், மகள் பலி

சாலை விபத்தில் தாய், மகள் பலி

திருவண்ணாமலை:திருவண்ணாமலையை அடுத்த கோசாலை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜி, 40. இவரது மனைவி திலகவதி, 35. இவர்களின் மகள் பிரபா, 10. மகன் மோனிஷ், 8. அனைவரும் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வெறையூர் செல்ல திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில், தென்மாத்துார் அருகே 'ஹோண்டா' பைக்கில் சென்றனர். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில், நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் திலகவதி, பிரபா சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்து வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை