உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மனைபிரிவுக்கு ஒப்புதல் தர ரூ.1.80 லட்சம் லஞ்சம்; டி.வி. நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

மனைபிரிவுக்கு ஒப்புதல் தர ரூ.1.80 லட்சம் லஞ்சம்; டி.வி. நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை பிரிவுக்கு ஒப்புதல் வழங்க, ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சேட்டு, 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் புதிய மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்து வருகிறார்.மனைப்பிரிவில் ஒரு சில மனைப்பிரிவுகளுக்கு பேரூராட்சி ஒப்புதல் கேட்டு, திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் முருகன், 51; என்பவர், சேட்டுவிடம் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். தர மறுத்தவரிடம் முருகன் பேரம் பேசியதில், இறுதியாக 1.80 லட்சம் ரூபாய் தருவதாக சேட்டு ஒப்புக்கொண்டார்.பின்னர் இது குறித்து விழுப்புரம், லஞ்சம் ஒழிப்பு அலுவலகத்தில் சேட்டு புகார் அளித்தார்.அதன்பேரில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., (பொறுப்பு) வேல்முருகன், விழுப்புரம் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.1.80 லட்சம் பணத்தை, நேற்று தனது அலுவலகத்தில் இருந்த செயல் அலுவலர் முருகனிடம் சேட்டு கொடுத்தார்.அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செயல் அலுவலர் முருகனை லஞ்சப் பணத்துடன் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramalingam Ayyanar
செப் 09, 2024 20:18

தன் தலையில் மண் அள்ளிப்போட்டுக் கொண்ட ஜென்மம், இதுதான் இவன் இந்த ஆசனத்தில் பதவியில் அமர்ந்திருக்கும் கடைசி நாளாக இருக்கவேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை