| ADDED : நவ 22, 2025 12:12 AM
போளூர்: போளூரில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார், 40. கடந்த, 2016 ஜன., மாதம், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். போளூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் குமாரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவ ண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, தொழிலாளி குமாருக்கு, 20 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.