மேலும் செய்திகள்
தீப திருவிழாவில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா
23 hour(s) ago
சிறுமிக்கு தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு
22-Nov-2025
லாரி டிரைவரை கொன்ற மனைவிக்கு காப்பு
20-Nov-2025 | 1
மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
20-Nov-2025
திருவண்ணாமலை: நவ. 25-: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின் கொடியேற்ற விழா நடந்தது.அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்கள் பஞ்ச மூர்த்திகள் போன்றோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொ டர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஏழாம் நாளான, வரும், 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், டிச., 3 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் விழாக்கோ லம் பூண்டுள்ளது.
23 hour(s) ago
22-Nov-2025
20-Nov-2025 | 1
20-Nov-2025