மேலும் செய்திகள்
மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
20-Nov-2025
பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு
17-Nov-2025
3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு
11-Nov-2025
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை மீது மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள, 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடமிருந்து கொள்முதல் செய்து, நேற்று கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, இன்று, 21ல் நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், விழா இனிதே நடக்க வேண்டியும் பிரார்த்தனையுடன் செய்யப்பட்டு உற்சவம் தொடங்குகிறது. வரும், 24ல் கொடியேற்றமும், வரும், 30ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், டிச., 3ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு நேற்று, கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது. நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவிலில் தொடங்கப்பட்டுள்ள நெய் காணிக்கை கவுன்டரில் செலுத்தலாம். நேரில் வர முடியாத பக்தர்கள், ஆன் லைன் மூலமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
20-Nov-2025
17-Nov-2025
11-Nov-2025