| ADDED : நவ 20, 2025 02:09 AM
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் அபிநயா, 16. தண்டராம்பட்டு, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை, அவரது உறவினர்கள் தேடி சென்றபோது, நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியிலுள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். பெற்றோர் அதிர்ச்சியடைந்து தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிந்து, மாணவி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரிக்கின்றனர்.