உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  தீப திருவிழாவில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா

 தீப திருவிழாவில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, தீப திருவிழாவின் விநாயகர் உற்சவத்தில், மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று, 24ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், விழா எவ்வித இடையூறுமின்றி இனிதே நடக்க வேண்டி, நேற்றிரவு விநாயகர் உற்சவம் நடந்தது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடத்தப்பட்டு, பின்னர் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அ பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர், மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை