மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
9 hour(s) ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
காட்பாடி:வேலுார் மாவட்டம், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், கடந்தாண்டு நடந்த தணிக்கையின் போது, பல காலகட்டங்களில் போலியான ஆவணங்கள் வாயிலாக, பத்திரப்பதிவுகள் நடந்தன. இதில், அரசுக்கு சொந்தமான, 8 ஏக்கர் புறம்போக்கு நிலம், மற்றொரு அரசு நிலம், 73 சென்ட் பலருக்கு போலியான ஆவணம் வாயிலாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததும், ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., சுதாமல்யா, கடந்தாண்டு, 10 நாட்களாக சார் - பதிவாளராக பொறுப்பு வகித்த, காட்பாடி சார் - பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவகுமார் முறைகேடுகளுக்கு உடந்தை என தெரிந்தது.விசாரணை அறிக்கையை, பத்திரப்பதிவு ஐ.ஜி., ஆலிவர் பொன்ராஜுக்கு, டி.ஐ.ஜி., சுதாமல்யா அனுப்பி வைத்தார். அதன்படி, காட்பாடி சார் - பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
9 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025