மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மதுராம்பிகை நகரிலுள்ள மகளிர் குழுவிற்கு, தனியார் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் குறைந்த வட்டியில் பணம் கொடுத்து, அதை வசூலித்து வருகின்றனர். இதில், தவணையை தாமதமாக செலுத்தும் பெண்களிடம், பைனான்ஸ் ஊழியர்கள் பணம் வசூலிக்கும்போது, ஆபாசமாக பேசி மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு, தவணையை சரிவர செலுத்தாத அப்பகுதியைச் சேர்ந்த ஷாகிராபானுவிடம் ஊழியர் ஒருவர் அவதுாறாக பேசியதால், அவமானமடைந்த அப்பெண், மன உளைச்சலில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இத்தகவல் அப்பகுதியில் பரவியதால், ஏராளமான பெண்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். குடியாத்தம் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.
02-Oct-2025
02-Oct-2025