மேலும் செய்திகள்
கார் வாங்கி தராத தந்தையை கொன்ற மகனுக்கு காப்பு
19-Dec-2025
தீயில் எரிந்து ஏ.டி.எம்., இயந்திரம் நாசம்
16-Dec-2025
அஞ்சல் கண்காட்சியில் டி.வி.ஆர்., தபால் தலை
14-Dec-2025
குடியாத்தம், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லப்பாடி காப்புக்காடு பகுதியில், செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்துவதாக வந்த தகவல் அடிப்படையில், குடியாத்தம் வனத்துறையினர், நேற்று கல்லப்பாடி முதலியார் ஏரி காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தவரை, வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த முனிராஜ், 45, என்பதும், செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, 750 கிலோ கொண்ட, 15 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். இதையடுத்து, முனிராஜை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
19-Dec-2025
16-Dec-2025
14-Dec-2025