உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கிணற்றில் மூழ்கி மூவர் பலி; நீச்சல் பழகிய போது விபரீதம்

கிணற்றில் மூழ்கி மூவர் பலி; நீச்சல் பழகிய போது விபரீதம்

ஒடுகத்துார் : வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பிச்சநத்தத்தை சேர்ந்தவர் தொழிலாளி சுரேஷ், 40. இவரது மனைவி பவித்ரா, 30. இவர்களது மகன் ரித்திக், 9, மகள் நித்திகா ஸ்ரீ, 7. தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தனர். பவித்ரா, தினமும் மகன் மற்றும் மகளை அருகிலுள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக செய்தார்.அதன்படி, பவித்ரா நேற்று வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்த போது, மூவரும் கிணற்றில் மூழ்கி பலியாகினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், சுரேஷ் தேடி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில், மகள் நித்திகாஸ்ரீ சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஒடுகத்துார் தீயணைப்பு துறையினர் பவித்ரா, ரித்திக் மற்றும் நித்திகா ஸ்ரீ சடலங்களை மீட்டனர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை