உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / அண்ணாமலை பேனர்கள் கால்வாயில் வீச்சு

அண்ணாமலை பேனர்கள் கால்வாயில் வீச்சு

வேலுார்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வேலுார் மாவட்டத்தில், பிப்., 2, 3ம் தேதிகளில், 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொள்கிறார். அவரை வரவேற்று, பா.ஜ.,வினர், வேலுார் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பேனர் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.இந்நிலையில், வேலுார் அண்ணாமலை சாலையில், ராஜா தியேட்டர் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள நேஷனல் சர்க்கிள் பகுதிகளில், பா.ஜ.,வினர் வைத்த டிஜிட்டல் பேனர்களை சிலர் கிழித்து சேதப்படுத்தி, காட்பாடியில் சாலையோர கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர்.இதைக்கண்டு, பா.ஜ.,வினர் அதிர்ச்சியடைந்தனர். பேனரை கிழித்த மர்ம கும்பல் மீது நடவடிக்கை கோரி, பா.ஜ.,வினர், வேலுார் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை