உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / எம்.பி., நடத்திய தர்ணா; மணல் கடத்தியவர் கைது

எம்.பி., நடத்திய தர்ணா; மணல் கடத்தியவர் கைது

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 12ல் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய அனிச்சம்பாளையத்தை சேர்ந்த ராஜா, நன்செய் இடையாறை சேர்ந்த சேகர் ஆகிய இருவரையும் கைது செய்யக்கோரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி., சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம், டி.எஸ்.பி., சங்கீதா, 'மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். மணல் திருடியவர்களை கைது செய்கிறேன்' என, உத்தரவாதம் அளித்தார்.இதையடுத்து, தனிப்படை அமைத்து மணல் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராஜா, 38, மினி ஆட்டோவில் காவிரி ஆற்றில் இருந்து மணல் திருடி சென்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி