உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு

 மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு

வேலுார்: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக் கும் மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில், முதல் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பொறுப்பேற்றார் . இந்நிலையில், வேலுார் மாவட்டம், செஞ்சி ஊராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலராக நியமிக்கப்பட்டவரை பதவி பிரமாணம் எடுக்க விடாமல் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, செஞ்சி மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் அன்பு, வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: வேலுார் கலெக்டர் என்னை செஞ்சி பஞ்., நியமன கவுன்சிலராக நியமனம் செய்தார். ஆனால், பஞ்., தலைவர் மல்லிகா ராஜேந்திரன் எனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காமல், அலைக்கழிக்கிறார். துணை தலைவர் எனக்கு சிபாரிசு செய்தாலும், பஞ்., தலைவர் மல்லிகா ராஜேந்திரன், அதை தடுத்து, 'நீ யாரை வேண்டுமானாலும் சென்று பார்; என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என, அலட்சியமாக கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனுவை பெற்ற அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை