உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / குடும்ப தகராறில் வாலிபரை கொன்றவர் கைது

குடும்ப தகராறில் வாலிபரை கொன்றவர் கைது

வேலுார்:வேலுார் மாவட்டம், ஓடுகத்துார் அடுத்த ஓங்கபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம், 23, சென்ட்ரிங் தொழிலாளி. புலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி, 35. இவர், கவுதமின் அத்தை நிரோஷா, 30, என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.கவுதம், கார்த்தி இருவரும் நேற்று முன்தினம் இரவு, மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, கத்தியால் குத்தியதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார்.வேப்பங்குப்பம் போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை