உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் சாலைஅகரம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் பெருமாள், 42; சுந்தரமூர்த்தி மகன் மகாலிங்கம், 34; செல்வம் மகன் ரஞ்சித்குமார், 23; ஆகியோர், அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. போலீசார், 3 பேரையும் பிடித்து வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை