உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரெட்கிராஸ் ஆலோசகர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரெட்கிராஸ் ஆலோசகர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர்களுக்கு, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, பெருகி வரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், இதனால் ஏற்படும் பாதிப்புகள், இதிலிருந்து கவனத்தோடு இருக்க போதுமான வழிமுறைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகழ்ச்சியில், 1930 உதவி எண், cybercrime.gov.inபற்றி விளக்கமளித்து துண்டு பிரசுரங்கள், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர்களுக்கு வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை