| ADDED : ஆக 22, 2024 12:24 AM
வானுார் : கல்லுாரிக்கு சென்ற மாணவி காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.கிளியனுார் அடுத்த வில்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் கலைஅமுது, 20; இவர் மயிலம் தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் கலை அமுது கிடைக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி, புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர். மேலும், இந்த பெண்ணை அடையாளம் கண்டால், கிளியனூர் காவல் நிலையம், 94981-00532 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.