உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உள்ளாட்சியை கலைத்தால் வழக்கு ஊராட்சி தலைவர்கள் சங்கம் முடிவு 

உள்ளாட்சியை கலைத்தால் வழக்கு ஊராட்சி தலைவர்கள் சங்கம் முடிவு 

செஞ்சி: உள்ளாட்சி அமைப்புகளை கலைத்தால் வழக்கு தொடர செஞ்சி ஒன்றிய தலைவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது. சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் அய்யனார், பொருளாளர், ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவிகாலம் முடியும் வரை பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும். அரசியலமைப் புக்கு எதிராக உள்ளாட்சி அமைப்பை தமிழக அரசு கலைக்கக் கூடாது.அரசியல் அமைப்பின் 356 பிரிவை நீக்க வேண்டும் என்ற கொள்கை உள்ள தமிழக முதல்வர் ஊராட்சி தலைவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.உள்ளாட்சிகளை அரசு கலைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள் கலையரசி, சுபா, சுலோசனா ஜெயபால், பிருந்தா, பராசக்தி, அன்னமயில் ஜெயராமன், முத்தம்மாள் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை