மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
2 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
3 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
கண்டமங்கலம்: கண்டமங்கலம் பகுதியில் மின் தடையை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் அடுத்த வனத்தாம்பாளையம் ஏரி பகுதியில் சவுக்கு தோப்பில் கடந்த 9ம் தேதி காலை 11:00 மணிக்கு மின் கம்பி அறுந்து விழுந்தது. அதேபோல் சேஷாங்கனுார் வயல்வெளி பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது.இதனால் வனத்தாம்பாளையம், குயிலாபாளையம், சேஷாங்கனுார் மற்றும் பி.எஸ்.பாளையம் ஆகிய நான்கு கிராமங்களில் 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை 3 நாட்கள் மின்சார வினியோகம் முற்றிலும் தடைபட்டது. மின்சாரம் தடைபட்டதால் குடிநீர் வினியோகமும் இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.இதனைக் கண்டித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வனத்தாம்பாளையம் கிராம மக்கள் திருவாண்டார்கோவில் - பெரிய பாபுசமுத்திரம் சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.அதனைத் தொடர்ந்த, மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அன்று மாலை 4:00 மணியளவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago