உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் இருந்து இறங்கிய பெண் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலி

ரயிலில் இருந்து இறங்கிய பெண் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலி

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.விழுப்புரம் அடுத்த அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி தேவகி,55; இவர், சென்னை மயிலாப்பூரில் இருந்து வந்திருந்த தனது மகள் அஸ்வினி,30; மற்றும் பேரப்பிள்ளைகளை சென்னைக்கு வழியனுப்பி வைக்க நேற்று மாலை விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தார். மாலை 4:50 மணிக்கு, 5வது பிளாட்பாரத்தில் வந்த, புதுச்சேரி - சென்னை பாசஞ்சர் ரயிலில், தனது மகள் மற்றும் பேரப் பிள்ளைகளை ஏற்றிவிட்டு, கீழே இறங்க முயன்றார்.அப்போது, ரயில் புறப்பட்டதால், நிலை தடுமாறி கீழே பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தவர் ரயில் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.அதனைக் கண்டு திடுக்கிட்ட பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். விழுப்புரம் ரயில்வே போலீசார்தேவகியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை