உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்குள் மோதல் விழுப்புரத்தில் 2 பேர் கைது

மாணவர்களுக்குள் மோதல் விழுப்புரத்தில் 2 பேர் கைது

விழுப்புரம்:விழுப்புரம், பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பஸ்சிற்காக காத்திருந்த பள்ளி மாணவர் ஒருவர், அருகில் நின்ற கல்லுாரி மாணவரிடம் நன்னாடு கிராமத்திற்கு செல்லும் பஸ் எப்போது வரும் என கேட்டார்.அதில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கல்லுாரி மாணவர் தாக்கியதில் நன்னாடை சேர்ந்த பள்ளி மாணவரின் மண்டை உடைந்தது.இதையறிந்த பள்ளி மாணவர்களின் ஆதரவாளர்கள் தாக்கியதில், கல்லுாரி மாணவர் மயக்கம்அடைந்தார். அதை தடுக்க முயன்ற பெண் காவலர் நிஷாந்தியை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து நிஷாந்தி அளித்த புகாரின் படி, விழுப்புரம் மேற்கு போலீசார், ஜீவா,19, பிரதீப்குமார், 25, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இதேபோல, பிளஸ் 2 மாணவர் அளித்த புகாரின் படி, சதீஷ், அஜய் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை