உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த நாமக்கல் மாவட்ட வாலிபர் இறந்தார்.நாமக்கல் மாவட்டம், காடச்சநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் மகன் சச்சின் என்கிற கணபதி ஆகாஷ், 23; இவர், நேற்று முன்தினம் தனது யமஹா பைக்கில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றார். பின்னால், நண்பர் அரிதாஸ் அமர்ந்து சென்றார்.விழுப்புரம் அடுத்த கொளத்துார் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னால் பைக்கில் சென்ற திருப்பாச்சனுாரைச் சேர்ந்த ரத்தினம், 32; என்பவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.இதில், பின்னால் சென்ற சச்சின் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, சென்னை பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ