உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகள் ஒத்திவைப்பு

மாஜி அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகள் ஒத்திவைப்பு

விழுப்புரம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்குகளின் விசாரணை வரும் ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஆரோவில், கோட்டக்குப்பம் மற்றும் விழுப்புரத்தில் கடந்தாண்டு நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும், விமர்சித்து பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார்.இந்த 3 வழக்குகளும், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதியில் பேசிய வழக்குகளை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டும், விழுப்புரம் பொதுக்கூட்ட வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனு அளித்தனர்.அதனை ஏற்ற மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், மூன்று வழக்குகளின் விசாரணையை வரும் ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை