உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அத்தியூர் -அனந்தபுரம் சாலை விரிவாக்க பணி துவக்கம்

 அத்தியூர் -அனந்தபுரம் சாலை விரிவாக்க பணி துவக்கம்

செஞ்சி: அத்தியூர் - அனந்தபுரம் விரிவாக்க பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். செஞ்சி ஒன்றியம் அத்தியூர்-அனந்தபுரம் இடையிலான 2 கி.மீ., சாலையை ரூ.2.81 கோடி மதிப்பில் 3.75 மீட்டர் அகலத்தில் இருந்து 5.50 மீட்டர் அகல சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நேற்று துவங்கியது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், நகர செயலாளர் சம்பத், முன்னாள் நகர செயலாளர் கல்யாண்குமார், சம்பத்குமார், ஒன்றிய பிரதிநிதிகள் அய்யாதுரை, கோடீஸ்வரன், துணை செயலாளர் செல்வமணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை