உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது

இரு குடும்பத்தினர் மோதல்: 3 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குமளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி தமிழ் இலக்கியா, 28; இவரது 2 வயது மகனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராவணன், 35; என்பவரின் 3 வயது மகனும், வீட்டின் முன் விளையாடினர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.இதனையறிந்த மணிகண்டன் குடும்பத்தினர், ராவணன் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இது குறித்து, இரு தரப்பு புகாரின் பேரில், ராவணன், 35; ராஜாங்கம், 50; தமிழ்மாறன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து, ராவணன், முருகானந்தம், 33; ரவிக்குமார், 35; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை