உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி அடுத்த பாலப்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவகாந்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 21ம் தேதி காலை கரிக்கோலம் நடந்தது. மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜையும், இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 108 திரவிய ஹோமமும், 10:00 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 10:20 மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மூலஸ்தான சிவகாந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை