மேலும் செய்திகள்
மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம்
5 minutes ago
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
32 minutes ago
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
21 hour(s) ago
விழுப்புரம்: மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தேர்தல் பணிகள், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் குறித்தும், ஆலோசனை வழங்கி பேசினார். விழுப்புரம் தொகுதி மேற்பார்வையாளர் துரை சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரும் 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவை, விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் நலத்திட்ட உதவி, அன்னதானம் கொண்டாடுவது. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது. 26ம் தேதி கலைஞர் அறிவாலயத்தில் மெகா ரத்ததான முகாம் நடத்துவது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தீவிரமாக செயல்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், சுரேஷ், மாரிமுத்து, பிரேமா, நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல். ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம், பேரூராட்சி செயலாளர் ஜீவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ராஜா, சந்திரசேகர், கணேசன், சீனுசெல்வரங்கம். பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற் றனர். தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு நன்றி கூறினார்.
5 minutes ago
32 minutes ago
21 hour(s) ago