உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

விழுப்புரம்: வளவனுார் பேரூராட்சி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கி துவக்கி வைத்தார்.விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்போடு வேட்டி, சேலையை லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கி துவக்கி வைத்தார்.இதில், பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, துணை தலைவர் அசோக், தி.மு.க., பேரூர் செயலாளர் ஜீவா, பொதுக்குழு சம்பத், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுவை சுரேஷ், கூட்டுறவு துணை பதிவாளர் பிரியதர்ஷினி, சார் பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சசிகலா கபிரியேல், மகாலட்சுமி செந்தில், சந்திரா பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்தீபன், கீதா செந்தில், உமாமகேஸ்வரி சுகுமாறன், பத்மாவதி திரிசங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பேரூராட்சியில் விக்கிரவாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேரூராட்சி 15-வார்டுகளை சேர்ந்த 8 ஆயிரத்து 693 ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுதொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக அங்காளம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.மாவட்ட பதிவாளர் அழகப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன்,சமூக நல தனி தாசில்தார் ரகுராமன், வட்ட வழங்கல் அலுவலர் விமல் ராஜ் முன்னிலை வகித்தனர். கள அலுவலர் கவுசல்யா வரவேற்றார்.பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, செயல் அலுவலர் ஷேக் லத்திப், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, தெய்வீகன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ஜெயபால் ,நகர செயலாளர் நைனா முகமது, நகரத் தலைவர் தண்டபாணி,மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.வங்கி செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

விழுப்புரம் நகராட்சி

விழுப்புரம் நகராட்சி 9வது வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த குடும்பத்தினருக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கமலா நகர் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர் மன்ற கவுன்சிலர் வழக்கறிஞர் ராதிகா தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு ரூ.ஆயிரம் ரொக்கப் பணம், முழு கரும்பு மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு தொகுப்பினை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, ரேஷன் கடை விற்பனையாளர் ஆண்டவர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை